காக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா இது? அம்மாவாக கலக்கிய ஐஸ்வர்யா வெளியிட்ட காணொளி
காக்கா முட்டை திரைப்படம் வெளியாகி 6 வருடங்கள் ஆகிய நிலையில், இதில் தனது மகன்களாக நடித்த சிறுவர்களுடன், நடிகை ஐஸ்வர்யா லைவ் வந்துள்ளார்.
2015ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி வெளியான படம் 'காக்கா முட்டை'. மணிகண்டன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இரண்டு தேசிய விருதுகளை வென்ற இப்படம் வெளியாகி நேற்றுடன் 6 வருடங்கள் முடிந்துள்ளது.
இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பதிவில், "காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது! 6 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே நாளில் 'காக்கா முட்டை' வெளியானது.
எப்போதும் என்னுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மிகச்சிறந்த படம். தடைகளை உடைத்து என்னுடைய சினிமா வாழ்க்கையை உயர்த்தியது.
இப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மணிகண்டன், தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி" என்று கூறியிருந்தார்.
பின்பு நேற்று இரவு இப்படத்தில் நடித்த சிறுவர்களுடன் லைவ் வந்துள்ளார். இதில் இப்படம் குறித்து பல விடயங்களை பேசியுள்ளார். குறித்த சிறுவர்களும் மிகப்பெரிய பையனாக வளர்ந்ததுடன் தற்போது சினிமாவில் நடித்தும் வருகின்றனர்.