திருமணத்திற்கு பின்னும் ஒற்றை கவர்ச்சி புகைப்படத்தால் 8 லட்சம் லைக்குகளை குவித்த காஜல் அகர்வால்.. படு வைரல்!
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.
மேலும், இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள். திருமணத்திற்குப் பிறகும் படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த ஒரு புகைப்படம் மட்டும் 8 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. மேலும் ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து கமண்ட் செய்து வருகிறார்கள்.