கடன் பிரச்சினையுள்ளவர்களுக்கு கண்டிப்பாக இந்த கயிறு கட்டிருப்பாங்க! ஏன் தெரியுமா?
தற்போது இருக்கும் விலைவாசிகளை சமாளிக்க சம்பளம் மட்டும் போதாது என பலர் புலம்பி கேட்டிருப்போம். இதனால் வீட்டை சுற்றி சுற்றி கடன் வாங்கி வைத்திருப்போம்.
கருப்பு கயிற்றின் மகிமை
முதல் தடவையாக கடன் வாங்கும் போது கொஞ்சம் யோசிப்போம். இதனையும் தாண்டி சென்று விட்டால் அடுத்தடுத்தாக நிறைய கடன்களை வாங்கி வைத்து கொண்டு அதனை எப்படி கட்டுவது என புலம்பிக் கொண்டிருப்போம்.
இதனை சில ஆன்மீக வழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் சரிச் செய்து கொள்ளலாம் என எமது முன்னோர்கள் கூறுவார்கள்.
பரிகாரங்கள் மூலம் சரிச் செய்ய முடியாது என ஒன்று இல்லை. பொதுவாக ஆண்களும் சரி பெண்களும் கருப்பு கயிறை கைகளில் கால்களில் கட்டுவது வழக்கம். இந்த பழக்கம் காலங்காலமாக கடைபிடித்து வரும் ஒரு பழக்கமாக பார்க்கப்படுகின்றது.
எமது முன்னோர்கள் எதிர்மறையான சக்திகள் எம்மை நெருங்காமல் இருப்பதற்கு தான் கருப்பை கயிற்றை கட்டி வந்தார்கள்.
இவ்வாறு கட்டபட்ட கருப்பு கயிறு எப்படி கடன் பிரச்சினை கட்டுபடுத்துகின்றது என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கடன் பிரச்சினைக்காக பரிகாரங்கள் செய்யும் போது அதனை வியாழக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும்.
குருபகவானின் அனுக்கிரகம் நமக்கு துனையாக இருந்தால் கடன் பிரச்சினையிலிருந்து விரைவாக வெளியில் வரலாம்.
பரிகாரம் செய்யும் முறை
யாரு கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களோ அவர்கள் முழு நீளத்திற்கு கருப்பு நிற கயிற்றை வாங்கி கொள்ள வேண்டும்.
இதனை குறித்த நபரின் கால் முதல் தலை வரை நீளமாக அளந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கருப்பு கயிறில் ஆங்காங்கே சின்ன சின்ன முடிச்சுகளாக போட்டு அதை சின்னதாக கையில் சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் எல்லாம் செய்து முடித்த பின்னர் கிழக்கு திசையில் அமர்ந்து உங்கள் தலையை கிளாக் வயசில் ஏழு முறை சுற்ற வேண்டும். இவ்வாறு யார் பூஜை ஆரம்பித்தார்களோ அவர்கள் தான் இறுதி வரை செய்ய வேண்டும்.
மனதில் கடன் சுமை தீற வேண்டும் என பிராத்திக் கொள்வது அவசியம். பூஜை முடிந்த பின்னர் கயிற்றை ஓடும் ஆற்றில் விட்டு விட வேண்டும் இவ்வாறு செய்தால் கடன் சுமை கூடிய விரைவில் குறைந்து வீட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.