பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்? இதுதான் அந்த ரகசியம்
பெண்கள் சிலர் தங்களது காலில் கருப்பு கயிற்றினை கட்டுவதை நாம் அதிகமாக அவதானித்திருப்போம்... அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
காலில் கறுப்பு கயிறு
பொதுவாக பெண்கள் இவ்வாறு காலில் கட்டப்படும் கருப்பு கயிறுக்குள் பல காரணங்கள் உள்ளது. இவ்வாறு கட்டிக்கொள்வதால், தீய சக்திகள் நெருங்காமல் இருப்பதுடன் செய்வினை, சூனியங்கள் இவையும் நெருங்காமல் இருக்கும்.
அதுமட்டுமின்றி சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தினை குறைக்கும் இந்த கயிற்றினால் கண் திருஷ்டியும் அண்டாமல் இருக்கும்.
கறுப்பு கயிறை எவ்வாறு கட்டலாம்?
நாம் காலில் கட்டப்போகும் கறுப்பு கயிற்றினை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். அதிலும் சனிக்கிழமையில் கட்டுவது மிகவும் சிறப்பு.
இந்த கயிற்றில் 9 முடிச்சுகள் போட்டு பின்பு வலது காலில் தான் கட்ட வேண்டும்.
மேலும் நீண்ட கால தீராத நோய் இருந்தால், உடல் நல கோளாறுகள் இருந்தால் இந்த கயிறை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று கட்ட வேண்டும். கட்டும் பொழுது, துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் மந்திரத்தை உச்சரிக்கலாம்.
பருவமடைந்த பெண்கள் வெளியே செல்லும் இதனை கட்டி விடுவதுடன் இதனால் எதிர்மறை ஆற்றல் தாக்கம் குறையும்.