இட்லிக்கு தொட்டுக்க காரச் சட்னி... இந்த ஒரு பொருள் இருந்தால் இன்னும் அதிக சுவை
பொதுவாகவே ஒரு சிலருக்கு இந்த இட்லி, சட்னி என்றால் கொள்ளைப் ப்ரியம். அதிலும் ரோட்டுக்கடைகளில் செய்யும் இட்லிக்கு நாக்கை அடிமையாக்கும் அளவிற்கு இருப்பார்கள்.
அப்படி ரோட்டுக்கடையில் இட்லிக்கு தொட்டுக்க கொடுக்கும் சட்னியில் என்ன சேர்த்து செய்வார்களோ அப்படியொரு சுவை இருக்கும். அதே போல வீட்டில் இந்த சட்னியை செய்யவேண்டும் என்பவர்கள் நீங்களும் வீட்டில் இந்த கார சட்னியை செய்யலாம்.
காரசட்னி செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம் என்பவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி தேவையான அளவு தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது வறுத்த பொருட்கள் எல்லாம் பொன்னிறமானவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து அரைத்த சட்னி கலவையை சேர்த்தால் ரோட்டுக் கடை டேஸ்ட்டில் காரச்சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |