காரசாரமான சிவப்பு மிளகாய் சட்னி! இப்படி செய்தால் 10 இட்லி கூட பத்தாது
பொதுவாக சமையலில் சிவப்பு மிளகாயை காரத்துக்காக சேர்த்துக் கொள்வோம். ஆனால், அதே சிவப்பு மிளகாயில் சட்னி அரைத்து உண்டால் எப்படியிருக்கும். இனி சிவப்பு மிளகாயில் எவ்வாறு சட்னி செய்யலாம் எனப் பார்ப்போம்.
இது இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
வெள்ளைப் பூண்டு - 3 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு
கடுகு - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகை தாளித்து அதில் அரைத்த சட்னியை சேர்த்து ஒரு நிமிடம் கிளிறிவிட்டதன் பின்னர் அடுப்பை அணைக்கவும்.
காரசாரமான மிளகாய் சட்னி ரெடி.