நடிகர் சூர்யா வீட்டில் இப்படியொரு ரூல்ஸா? ஜோதிகா போட்டுடைத்த உண்மை
நடிகர் சூர்யாவின் வீட்டில் இருக்கும் முக்கியமான ரூல்ஸை அவரது மனைவி ஜோதிகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா ஜோதிகா
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்பு ஜோதிகா குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு நடிப்பில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.ஜோதிகா தனது குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் செட்டில் ஆன ஜோதிகா பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளியான சைத்தான் திரைப்படம் வசூலி்ல் உச்சத்திற்கு சென்றது.
வீட்டில் போட்டுள்ள ரூல்ஸ்
ஜோதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், வீட்ல நாங்க கேர்ள்ஸ் ஒரு செட், பாய்ஸ் ஒரு செட்டாக இருப்போம், எல்லா பெண்களும் ஒரு குழுவாக இருப்போம். ரெண்டு பேருக்கும் நடுவுல சூர்யா இருப்பாரு.
கார்த்தி, சூர்யா படப்பிடிப்பில் இருப்பார்... சிவக்குமார் அப்பா ஸ்பீச் கொடுக்கிறதுல பிசியா இருப்பாங்க... வீட்டுல ஒரு ரூல்ஸ் இருக்கின்றது... மதிய உணவும், இரவு டின்னரும் எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிடனும். அதனால் நாங்க அந்த இரண்டு நேரமும் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்.
Ethirneechal: வீட்டிற்கு வந்த கடன்காரர்கள்! தோற்றுப்போன நந்தினி மீள்வது எப்படி? கெத்து காட்டும் குணசேகரன்
எனது மகள் தியாவிற்கு அப்பா தான் மிகவும் பிடிக்கும்... அவள் அப்பா செல்லம், மகன் தேவ் இரண்டு பேருடன் பாசமாக இருப்பான்..
நானும் சூர்யாவும் ஜோடியாக நடித்த படங்கள் எதுவும் தனது பிள்ளைகள்பார்த்ததில்லை. நாங்கள் தனித்தனியாக நடித்த படங்கள் அவர்கள் நிறைய பார்த்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மகன் தேவ் சினிமாவுக்கு வர உள்ளாரா என்ற கேள்விக்கு, ஜோதிகா நிச்சயமாக இல்லை என்றும் அவர் படிப்பில் பிஸியாக இருப்பதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |