60 வயதாகியும் திருமணம் செய்யாததுக்கு இது தான் காரணம்... உண்மையை உடைத்த கோவை சரளா!
பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா 60 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் இதுதானாம்.
கோவை சரளா
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகையாக இருப்பவர் கோவை சரளா.
ஆச்சி மனோரமா அவர்களுக்கு பிறகு சிறந்த காமெடி நடிகையாக யார் வருவார் என்று இருந்த நிலையில் கோவை சரளா தான் அந்த இடத்தை நிரப்பினார் என்றால் மிகையாகாது.
குறிப்பாக இவர் செந்தில், கவுண்டமணி, வடிவேலு மற்றும் விவேக்குடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
தற்போது 62 வயதாகும் நடிகை கோவை சரளா இதுவரை திருமணமே செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.
அண்மையில் இவர் ஒரு பேட்டியில் இது குறித்து பேசுகையில், நாம் பிறக்கும்போது தனியாக பிறக்கிறோம், இறக்கும் போது தனியாகத்தான் இறக்கிறோம்.
இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்று எனக்கு தோன்றியது, சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பல பெற்றோர்கள் அவர்களை குழந்தைகள் பார்த்துக் கொள்ளாத காரணத்தால் தனியாகவே வாழ்க்கையை கழிக்கிறார்கள், எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |