Ethirneechal: வீட்டிற்கு வந்த கடன்காரர்கள்! தோற்றுப்போன நந்தினி மீள்வது எப்படி? கெத்து காட்டும் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியின் நிகழ்ச்சி ஏமாற்றத்தை அளித்த நிலையில், ஞானம் கடன்காரர்களிடம் சிக்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
சிக்கலில் ஞானம்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.
ஞானம் கரிகாலனிடம் புதிய தொழில் செய்வதாக சென்று ஏமாந்துள்ளார். இந்நிலையில் கதிரும் தனக்கு வரவேண்டிய மொய் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் கோபத்தில் நந்தினி வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றார். மற்றொரு புறம் ஞானம் வெளி நபர் ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளார்.
அதனை குறித்த நபரும் வீட்டிற்கு வந்து கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தற்போது ஞானம் வீட்டில் என்ன பதில் அளிக்கப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |