கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா?
நவகிரகங்களில் ஒன்றாக பார்க்கப்படும் குருபகவான் மற்ற கிரகங்களை விட பணத்தை வாரிக் கொடுப்பதில் பாரபட்சம் பார்க்கப்பட்டார்.
இவரின் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஆனாலும் குறிப்பிட்ட சிலர் மாத்திரம் அமோக வெற்றியை காண்பார்கள்.
ஜோதிடத்தில் கூறப்பட்டது போன்று குரு பெயர்ச்சி, கடந்த நவம்பர் 11 ஆம் தேதி இரவு குரு வக்ர நிவர்த்தியாக மாறியது. இதனால் அடுத்து வரும் நான்கு மாதங்கள் குரு பகவான் தன்னுடைய நிலையில் இருந்து பின்னோக்கி நகர்வார்.
கடந்த நவம்பர் 11 அன்று இரவு 10:11 மணிக்கு அதன் வக்ர பயணத்தை துவங்கிய குருபகவான், 120 நாட்களுக்கு அதே நிலையில் பயணிப்பார்.
அந்த வகையில், பிறக்கப்போகும் மார்ச் 2026 வரை குருவின் வக்ர பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசியினர் கோடிகளில் சம்பாரிக்கப்போகிறார்கள். அப்படியாயின், கோடிகளில் வருமானத்தை தேடும் ராசியினர் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

கடக ராசிக்கு என்ன பலன்?
- கடக ராசியில் பிறந்தவர்கள் குரு பகவான் பெயர்ச்சியால் நிலுவையில் வைத்திருந்த வேலைகள் அனைத்தையும் முடித்து விடுவார்கள். கனவுகள் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அப்படியானவர்கள் இந்த பெயர்ச்சியால் நிஜமாக்குவார்கள். தொழில், நிதி அல்லது முக்கிய முடிவெடுப்பதற்கு இதுவே உங்களுக்கு சிறந்த நேரம். முடிந்தளவு உங்களுடைய முயற்சியை கைவிடாமல் முயற்சி செய்யுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கையொழுப்பம் ஈடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்?
- குருபகவான் வக்ர நிலையில் இருப்பதால் இவர்களுக்கு சமூகத்தில் கௌரவம் கிடைக்கும். புதிய கதவுகள் திறக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்வீர்கள். வாழ்க்கை துணை நீங்கள் இவ்வளவு நாட்களாக நினைத்தது போன்று அல்லாமல் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பயணங்கள் போக வேண்டும் என்ற கனவு உங்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கா? அப்படியானவர்கள் இந்த காலப்பகுதியில் முயற்சி செய்யலாம். வருமானங்கள் அதிகமாக வருவதால் செலவுகளில் கவனம் தேவை.
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்?
- மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பொற்காலமாகவே இருக்கும். மற்றவர்களுக்கு உங்களின் வளர்ச்சி பொறாமையாக இருக்கும். செலவுகள் குறைந்து சேமிப்பை அதிகப்படுத்தினால் நீங்களும் பணக்காரர்களாக இருக்கலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு குரு பகவானின் இந்த பெயர்ச்சியால் நல்ல வேலைகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நீங்கள் நினைத்தது போன்று நிம்மதியான வாழ்க்கை வாழ்வீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |