சாணக்கியர் கூற்று - அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இந்த 5 மகிழ்ச்சி கிடைக்குமாம்
சாணக்கியர் கூற்றுப்படி வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால் மட்டுமே ஐந்து வகையான சில மகிழ்ச்சிகள் கிடைக்குமாம். அது பற்றி விரைவாக பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியர் நீதி
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சாணக்கியர் அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே கிடைக்கும் 5 வகையான மகிழ்ச்சியை பற்றி கூறியுள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

- செல்வம் - ஒரு நபரிடம் ஏராளமான இருந்து அவன் எந்த தேவைக்காகவும் கடன் வாங்காமல் அவனிடம் தேவைக்கு அதிகமாக செல்வம் இருப்பின் அவனே முதல் அதிர்ஷடசாலி என சாணக்கியர் கூறுகிறார்.
- விருப்பமான உணவு - என்னதான் பணம் இருந்தாலும் அவர்களுக்கு பிடித்த உணவு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் துரதிஷ்டசாலி. நாம் விரும்பிய உணவு நமக்கு கிடைத்தால் நாம் அதிர்ஷ்டசாலிஎ என சாணக்கியர் கூறுகிறார்.
- நல்ல ஆரோக்கியம் - உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருப்பது மூன்றாவது பெரிய மகிழ்ச்சி. நல்ல ஆரோக்கியம் இருந்தால், உங்கள் விருப்பப்படி செல்வத்தைப் பயன்படுத்தலாம்.
- அன்பான மனைவி உங்கள் மனைவி உங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தால், உங்களுடன் ஒருபோதும் சண்டையிடவில்லை என்றால், இது வாழ்க்கையின் நான்காவது மகிழ்ச்சி.
- கீழ்ப்படியும் குழந்தை குழந்தை கீழ்ப்படிதலுடனும், உங்களை மதித்து நடந்தால், அது வாழ்க்கையின் ஐந்தாவது பெரிய மகிழ்ச்சி. தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் கீழ்ப்படிதலுடன் இருப்பது மிகவும் அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |