12 ஆண்டுகளுக்கு கழிச்சு குரு-சனி உருவாக்கும் ராஜயோகம்.. டபுள் ஜாக்பாட் யாருக்கு?
ஜோதிட சாஸ்த்திரங்களின்படி, குரு பகவான் ஒரு ராசியில் இன்னொரு ராசிக்கு செல்வதற்கு ஒரு ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார்.
அந்த ஆண்டு அதிவேகமாகவும், ஆக்ரோஷமாகவும் பயணிப்பார் என்று சொல்லப்படுகிறது. இப்படி இரண்டு முறை நடக்கும் குரு பெயர்ச்சி நடக்கும் பொழுது அதன் மாற்றம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
அதன்படி இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் மிதுன ராசிக்குள் நுழைந்திருக்கிறார். இந்த பயணம் அக்டோபர் 18 ஆம் தேதியான இன்றைய தினத்துடன் முடிவடைகிறது.
அதன் பின்னர் குரு பகவான் தந்தேராஸ் நாளில் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். அந்த ராசியில் டிசம்பர் 05 ஆம் தேதி வரை இருந்து விட்டு, மீண்டும் மிதுன ராசிக்குள் சென்று விடுவார். இந்த தாக்கங்களின் பாதிப்பு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.
அதே போன்று சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இதன் காரணமாக குரு- சனி இணைந்து விபரீத ராஜயோகம் உருவாக்கயுள்ளது.
அந்த வகையில், குரு- சனி இருவரின் பெயர்ச்சியால் வந்திருக்கும் யோகத்தால் அதிர்ஷ்டம் காணும் ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
குரு- சனி பெயர்ச்சி
சிம்மம் | சிம்ம ராசியில் பிறந்தவர்கள் குரு- சனியால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் நீண்ட காலமாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இந்த சமயத்தில் பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. இதுவரையில் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தொழிலில் தடைகள் அதிகமாக இருக்கிறது என வருத்தமாக இருப்பவர்கள் இந்த பெயர்ச்சிக்கு பின்னர் சந்தோஷமாக இருப்பார்கள். ஏனெனின் இந்த பெயர்ச்சியால் அதிகமான லாபம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். |
தனுசு | தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராஜயோகத்தால் ஒவ்வொரு துறையிலும் பிறந்தவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால் இந்த காலப்பகுதியில் நீங்கி விடும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. நல்ல லாபம் கிடைக்கும் வணிகர்கள் இந்த காலப்பகுதியில் முன்னேறி வருவார்கள். சம்பள உயர்வு இந்த காலப்பகுதியில் கேட்டால் கிடைக்கும். |
துலாம் | துலாம் ராசியில் பிறந்தவர்கள் உருவாகும் விபரீத ராஜயோத்தால் மகத்தான வெற்றியை பெறுவார்கள். உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். எந்த வேலை செய்தாலும் இந்த சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என கவலையா? அந்த கஷ்டம் இனி இருக்காது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அதிகாரிகளாக இருந்தால் அதிகமான பாராட்டுக்கள் இருக்கும். எதிரிகளை தோற்கடித்து வெற்றி காண வாய்ப்பு உள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).