நவம்பர் 12-ல் உருவாகும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!
ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலின் காரணியாக விளங்குகிறார்.
சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். தற்போது கடக ராசியில் பயணித்து வரும் செவ்வாய், நவம்பர் 12 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

ஏற்கனவே சிம்ம ராசியில் குரு பகவான் பயணித்து வருவதால், செவ்வாயின் வருகையால் குரு-செவ்வாய் சேர்க்கை உருவாகவுள்ளது.
ஜோதிடத்தின்படி, இந்த கிரகச் சேர்க்கை அதிர்ஷ்டம், தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் செயல்திறனில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் தாக்கம் 12 ராசிக்காரர்களிடமும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசியினர் வெற்றி, முன்னேற்றம் மற்றும் நிதி வளர்ச்சி போன்ற நற்பலன்களைப் பெறவுள்ளனர்.
அப்படி, சிம்ம ராசியில் உருவாகும் குரு-செவ்வாய் சேர்க்கையால் தொழில் மற்றும் நிதி விடயங்களில் உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் மூன்றாம் வீட்டில் குரு மற்றும் செவ்வாய் பகவானின் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்த கிரக அமைப்பின் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அதிகரிக்கும்.
தங்களின் மீதான நம்பிக்கை வலுப்பெற்று, தைரியத்துடன் செயல்படத் தொடங்குவீர்கள். நீண்ட நாட்களாக முடிவுக்கு வராமல் இழுபறியில் இருந்த காரியங்கள் சாதகமாக முடிவடையும்.
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கணிசமான வருமானத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினரிடையே நிலவி வந்த மனக்கசப்புகளும் கருத்து வேறுபாடுகளும் படிப்படியாக மறையும். குறிப்பாக நிதி நிலையில் அமோக வளர்ச்சி இருக்கும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களின் பன்னிரண்டாம் வீட்டில் குரு பகவானும் செவ்வாய் பகவானும் இணைவதால் வாழ்வில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் துணை அதிகமாக இருப்பதுடன், குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் அரங்கேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து, பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கும் லாபகரமான சூழல் உருவாகும். இதனால் பொருளாதார நிலை முன்பைவிட வலுப்பெறக்கூடும். வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பு கிடைக்கும் யோகம் உள்ளது.
துலாம்

துலாம் ராசிக்காரர்களின் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் குரு மற்றும் செவ்வாய் பகவானின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த அமைப்பு தொழில் வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்களையும் வெற்றிக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும்.
இதற்கு முன்பு செய்த முதலீடுகள் எதிர்பார்த்த வருமானத்தை அளிக்கக்கூடும். பணியிடத்தில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதோடு, முக்கியமான புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது.
சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயர்வதற்கான சூழல் அமையும். பொருளாதார வசதிகள் அதிகரிப்பதால் ஆடம்பரப் பொருட்களையும் சொத்துக்களையும் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |