சனியுடன் இணையும் குரு - மகிழ்ச்சி கிடங்கில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகள் எவை?
ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக அறியப்படுபவர் குரு பகவான். இவர் ஞானம், கல்வி, அறிவு, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார்.
இவர் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிக்கிறார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு அதிவேகமாக பயணித்து இரண்டு முறை ராசி மாற்றம் அடைந்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மிதுன ராசிக்குள் நுழைந்த அவர், அக்டோபர் 18 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்திருக்கிறார். டிசம்பர் 5 வரை இந்த ராசியில் பயணித்து மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைய இருக்கிறார்.

அதேசமயம் சனி பகவான் குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் வக்ர நிலையில் அதாவது பின்னோக்கிய நிலையில் பயணித்து வருகிறார்.
இந்த நிலையில் குரு மற்றும் சனி இருவரும் இணைந்து விபரீத ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். எனவே இதன் மூலம் பயன் பெறும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.
| மகரம் | மகர ராசியினர் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் பெறுவார்கள். அவர்கள் கடினமான காலங்களைக் கடந்து சந்தோஷமான அமைதியான காலத்தை நோக்கி செல்வார்கள். அவர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவார்கள். அதிக பணம் சம்பாதிப்பார்கள். சமூகத்தில் மரியாதை பெறுவார்கள். வாழ்க்கையின் சிறந்த நேரத்தை அனுபவிப்பார்கள். |
| மிதுனம் | மிதுன ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பெரும் லாபம் அடைவார்கள். முன்னர்ட் செய்த முதலீடுகளில் இருந்து அதிக லாபம் அடைவார்கள். வாழ்வில் சிறந்த காலத்தை அனுபவிப்பார்கள். வாழ்வில் பெரும் செல்வம் சேரும். புதிய உற்சாகத்துடன் வாழ்க்கையைத் தொடங்குவார்கள். வாழ்வில் பல வளங்கள் சேரும். வீடு, கார் உள்ளிட்ட சொத்துக்கள் வாங்கும் யோகம் உருவாகும். |
| கன்னி | கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. 100 ஆண்டுகளுக்குப் பிறகு, குருவின் பார்வை சனியின் மீது இருப்பதால், அதிக அளவிலான செல்வங்கள் சேரும். முந்தைய தோல்விகள் வெற்றிப் படிக்கட்டுகளை உருவாக்கும். சொத்து வாங்க உங்களிடம் போதுமான பணம் இருக்கும். வாழ்க்கை பல்வேறு திசைகளில் முன்னேறுவதற்கான பாதையைக் காண்பிக்கும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).