பிரபல நடிகை 3வது திருமணம்; விமர்சனத்திற்குள்ளாகும் புகைப்படங்கள்
நடிகை மீரா வாசுதேவன் யாருக்கும் தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மீரா வாசுதேவன்
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2001-ம் ஆண்டு ஒளிபரப்பான “காவேரி” என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமாகியவர் தான் மீரா வாசுதேவன்.
இதனை தொடர்ந்து சூர்யவம்சம், சித்தி 2 போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
சீரியலில் மட்டுமல்ல வெள்ளத்திரையிலும் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, ஆட்டநாயகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அதில் உன்னை சரணடைந்தேன் படத்துக்காக தமிழ்நாடு அரசின் விருதையும் வென்றிருக்கிறார்.
முதல் திருமணம்
இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலை மீரா வாசுதேவன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 5 வருடங்களுக்கு பின் இருவருக்கும் இடையிலாக மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
இரண்டாவது திருமணம்
இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து பிரபல வில்லன் நடிகர் ஜான் கொகேன் உடன் மீரா வாசுதேவனுக்கு பழக்க ஏற்பட்டு அது காதலாக மாறியது.
இவர்களுக்கு தற்போது ஒரு ஆண்குழந்தையும் இருக்கிறது. இந்த திருமண வாழ்க்கையும் நான்கு ஆண்டுகளில் நிறைவிற்கு வந்தது.
மீரா வாசுதேவனை விவாகரத்து செய்த ஜான் கொகேன் பூஜா ராமச்சந்திரனை காதலித்து கரம்பிடித்தார். அவர்களுக்கு ஆண் குழந்தையொன்றும் தற்போது இருக்கிறது.
இரண்டாவது திருமண வாழ்க்கையும் பிரிவில் முடிந்ததால் மீரா திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார்.
மூன்றாவது திருமணம்
இப்படியொரு நிலையில் யாருக்கும் தெரியாமல் குடும்ப உறுப்பினர்களை வைத்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமணம் கடந்த மே 21-ந் தேதி கோவையில் நடந்து முடிந்துள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட விபின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |