50 கோடியை தாண்டிய பெறுமதி.. 85 வயதில் கவுண்டமணியிடம் இவ்வளவு சொத்துக்களா?
வாயை பிழக்கும் ரசிகர்கள் கவுண்மணியிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கவுண்டமணி
தமிழ் சினிமாவில் தன்னுடைய டைமிங் காமெடி மூலம் பிரபலமாகியவர் தான் நடிகர் கவுண்டமணி.
இவர் தன்னுடைய யதார்த்தமான திறமையால் 320க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய மார்க்கட் இறங்கிய காலப்பகுதியில் செந்தலுடன் இணைந்து பல ஹிட் படங்கள் நகைச்சுவையில் கலக்கியிருப்பார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்த காலப்பகுதியில் சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
சொத்து விவரம்
இந்த நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 85 வது பிறந்த நாளை கொண்டாடும் கவுண்டமணியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி, இவரிடம் சென்னை மற்றும் சொந்த ஊர் என மொத்தமாக 70 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
கோலிவுட் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குபிடித்திருக்கும் கவுண்டமணி நகைச்சுவை மாத்திரமன்றி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
நீண்ட நாள் இடைவேளைக்கு பின்னர் தற்போது சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |