Jio New Year recharge plan: ஜியோவில் ரூ.2025க்கு ரீசார்... சிறப்பு சலுகைகள் என்ன?
ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு புத்தாண்டு பரிசாக ரூ.2025-க்கு அசத்தலான சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ
இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இதனை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருவதற்கு காரணம், இதன் மலிவான விலையாகும். இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியில் காணப்பட்ட போது, ஜியோ தனது 5ஜி சேவையை குறைந்த கட்டணத்தில் கொடுத்தது.
தற்போதைய திட்டம் என்ன?
ஜியோ நிறுவனம் 2025 புத்தாண்டை சிறப்பாக வரவேற்கும் வகையில், பயனர்களுக்கு 'New Year Welcome recharge plan ரூ.2025ஐ வழங்குகிறது.
புத்தாண்டு வரவேற்பு திட்டம் டிசம்பர் 11, 2024 முதல் ஜனவரி 11, 2025 வரை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்கள் பெரிய அளவில் சேமிப்பையும், கூடுதல் பலன்களையும் பெறலாம். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய ரூ.2025 செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 200 நாட்கள். அதுவரை வரம்பற்ற 5ஜி இணைய சேவைகளை நீங்கள் பெறலாம். கூடுதலாக, ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் 500 ஜிபி 4ஜி டேட்டாவும் கிடைக்கும்.
புத்தாண்டு வரவேற்பு திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடட் கால்களுடன், வரம்பற்ற எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் உள்ளது.
புத்தாண்டு வரவேற்பு திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், கூப்பன்கள் வடிவில் ரூ. 2150 மதிப்புள்ள கூடுதல் பலன்களையும் பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |