குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்... ரூ. 10 ஆயிரம் போதுமாம்
மிகக் குறைந்த விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வொம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் மொபைல் போனாக இருப்பது ஸ்மார்ட் போன் ஆகும். நடுத்தர மக்கள் வாங்கும் வகையில் மிகக்குறைந்த விலையிலும் ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வந்துள்ளது.
அந்த வகையில ரூ.10 ஆயிரத்திற்கு குறைவாக கிடைக்கும் ஐந்து ஸ்மார்ட்போன்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Redmi A4 5G
Redmi A4 5G ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.8,498 ஆகும். 6.85 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே மற்றும் 50 எம்பி மெயின் கேமராவும், 5 எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எளிதாக இயக்குவதற்கு 2 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஷ்டோரேஜ் என இரண்டு வகையில் கிடைக்கின்றது.
Poco M4 Pro
போகோ நிறுவனத்தின் Poco M4 Pro போனில் 6.43 இன்ச் டிஸ்பிளே மற்றும் 16 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரியர் கேமரா 64எம்பி+8எம்பி+2எம்பி என்ற வகையில் அமைந்துள்ளன. 6 மற்றும் 8 ஜிபி ரேம்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 64ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் என 3 வகையில் கிடைக்கும் இதன் விலை ரூ.8,999 ஆகும்.
Redmi 13C 5G
Redmi 13C 5G போனின் விலை ரூ.9,099 என்ற நிலையில், இதில் 6.74 இன்ச் டிஸ்பிளே மற்றும் 5 எம்பி செல்பி கேமரா, 50எம்பி மெயின் கேமரா கிடைக்கின்றது. நீண்ட நேரம் தாங்கும் 5000mAh பேட்டரியும், 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு பிரிவில் கிடைக்கின்றது. இந்த போனில் 4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி ரேம்களும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தையும் கொண்டுள்ளது.
Poco C61
Poco C61 போனில் 6.71 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 8எம்பி மெயின் கேமரா, 5எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம்கள் மற்றும் 64ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வகையில் கிடைக்கும் நிலையில், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ள இதன் விலையானது ரூ.5,999 ஆகும்.
Tecno Spark Go
வெறும் ரூ. 6,759ல் கிடைக்கும் Tecno Spark Go போனில் 5எம்பி செல்பி கேமராவும், 13எம்பி மெயின் கேமராவும், 6.56 இன்ச் ஹெச் டி பிளஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 3ஜிபி ரேம், 32ஜிபி மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |