Satcom வழியாக இணைய சேவையை வழங்க முடிவு செய்த ஜியோ- வெளியான அதிரடி அப்டேட்
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் இணையம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இந்த சேவையானது பல இடங்களில் கிடைக்காமல் அவதிப்படும் நிலையில் சிலர் இருக்கிறார்கள். எந்த ஒரு இடத்திலும் இருந்தபடியே அனைத்தையும் அறிவதற்கான எண்ணற்ற வசதிகளை இணையம் செய்து கொடுக்கின்றது.
தடங்களற்ற இணைய சேவை கிடைக்க எலான் மஸ்கின் Starlink, Amazon இன் Project Kuiper போன்ற திட்டங்களானது சந்தையில் தடம்பெற்று வருகிறது.
செயற்கைக்கோள் வழியாகக் செயற்படும் இந்த சேவையால் தடங்களற்ற ஒரு சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.
ஜியோவின் புதிய திட்டம்
மிகப்பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தற்போது Geospace Fiber என்ற திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது.
இதன்படி, Gigabit fiber என்ற செயற்கைக்கோள் அடிப்படையில் வரும் சேவையானது விரைவில் இந்தியாவில் தொடங்கப்படலாம் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திட்டத்திற்கான ஆவணங்கள் அனைத்தையும் Indian National Space Promotion and Authorization Centre இல் ஜியோ நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இத்திட்டம் கொண்டுவரப்பட்டால் ஜியோவின் செயற்கைக்கோள் சேவை தொடங்கப்படும் முதல் “ Satcom” சேவையாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை தொடங்குவதற்கான தொழில்நுட்ப அடிப்படையிலான செயற்கை கோள் இணைய சேவையை கடந்த வருடம் நடைபெற்ற ‘இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2023’ நிகழ்வில் காட்சிப்படுத்தியது.
வேலைபாடுகள்
அதுமட்டுமின்றி இந்தியாவின் 4 தொலைதூர இடங்களை இதற்காகத் தேர்வு செய்து சோதனை நடத்தி வருகிறது. அதில் கிர் (குஜராத்), கோர்பா (சத்தீஸ்கர்), நப்ராங்பூர் (ஒடிசா) மற்றும் அசாமின் ஓஎன்ஜிசி-ஜோர்ஹாட் உள்ளிட்ட இடங்கள் உள்ளடங்கும்.
அத்துடன் The Economic Times பத்திரிகையும், Satcom சேவைகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஒப்புதல்கள் மற்றும் அங்கீகாரங்களையும் IN-SPACe வசம் இருந்து ஜியோ விரைவில் பெற முடியும் என்று தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இது போன்ற சேவைகளை தொடங்க பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் பல அமைச்சகங்களின் ஒப்புதலை பெறவிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
லக்சம்பேர்க் தலைமையிடமாகக் கொண்டு செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Société Européenne des Satellites (SES) ஆனது இந்தியாவில் செயற்கைக்கோள் சேவையை தொடங்க ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
பூமியின் நடுத்தர சுற்றுப்பாதையில் இருக்கும் SES நிறுவனத்தின் O3b, புதிய O3b mPOWER என்ற செயற்கை கோளை ஜியோ நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும்.
எலான் மஸ்க் தலைமையிலான Starlink, Eutelsat இன் OneWeb மற்றும் Amazon இன் Project Kuiper ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் ஜியோவின் Satcom சேவைகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் மற்ற நிறுவனங்கள் இந்த சேவைகள் தொடங்குவது பற்றி எந்த அறிவிப்பும் விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |