தனுஷுடன் இருக்கும் ஆர்த்தி ரவி! பிரபல பாடகி வெளியிட்ட புகைப்படம்
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தினை பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ளார்.
ஜெயம் ரவி
நடிகர் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவியின் குடும்ப பிரச்சனை இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.
ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவர்கள் இருவரும் மாறி மாறி தங்களது நியாயத்தை அறிக்கையில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதும் பெரும் பேச்சுப் பொருளாக அமைந்துள்ளது.
சுசித்ரா வெளியிட்ட புகைப்படம்
இந்நிலையில் பாடகி சுசித்ரா, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
ஆர்த்தியின் அம்மா தனது மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஜெயம் ரவிக்கு வேண்டுகோள் வைத்துள்ள நிலையில், தற்போது இந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டாேவில் ஆர்த்தி தனுஷுடன் நாக்கை வெளியில் தள்ளியாவாறு போட்டோ எடுத்திருக்கிறார். இதில் கேப்ஷனாக சுசித்ரா, “ChatGPT-ஐ டவுன்லோட் செய்து, நாக்கை வெளியில் தள்ளி போட்டோ எடுத்திருப்பதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன என்று கேளுங்கள்”. என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |