முன்னாள் மனைவி ஆர்த்திக்காக ஜெயம் ரவி பாடிய முதல் பாடல் என்னனு தெரியுமா?
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தம்பதிகள் விவாகரத்து வரை சென்றுள்ள நிலையில், ரவிமோகன் பாடிய பாடல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிகள் தற்போது விவாகரத்து செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். இவர்களது பிரிவிற்கு காரணம் மூன்றாவது நபர் என்று கூறி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இவர் மூன்றாவது நபர் என்று கூறுவது பாடகி கெனிஷாவைத் தான் என்று அனைவருக்கும் தெரிந்த விடயமே. ஜெயம் ரவியும் கெனிஷாவுடன் சேர்ந்து பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது ஆர்த்தி தனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்று நேற்று குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கின் தேதியை நீதிபதி ஜுன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவி ஆர்த்திக்காக நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பாடல் தற்போது ரசிகர்களிடையே பேச்சு பொருளாகியுள்ளது.
ஆர்த்திக்காக பாடிய பாடல்
முன்பு நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி ஜோடி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். அதில் மகனுக்கும் மனைவிக்கும் டெடிகேட் செய்ய விரும்பும் பாடல் என்ன என அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு மகனுக்கு குறும்பா பாடல் என்று பதிலளித்த ஜெயம் ரவி, மனைவிக்கு முன்பே வா பாடலை டெடிகேட் செய்தார்.
பின்பு அவர் நடித்த படத்தின் பாடலில் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என ஆர்த்தி கேட்டவுடன், தீபாவளி படத்தில் இருந்து ‘காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்’ என்கிற பாடலை தன் குரலில் பாடி டெடிகேட் செய்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
