மேடையில் அழுத ஜெயம் ரவி - கட்டியணைத்து ஆறுதல் சொன்ன பெண் ரசிகைகள் கூட்டம்!
மேடையில் அழுத ஜெயம் ரவியை கட்டியணைத்து ஆறுதல் சொன்ன பெண் ரசிகைகளின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ படத்தில் இவர் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
இவருடைய இயற்பெயர் ரவி. ஆனால், இவர் முதன் முதலாக ‘ஜெயம்’ படத்தில் நடித்ததால் ஜெயம் ரவி என்று மாற்றிக்கொண்டார்.
காதல் கதைகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெயம் ரவி, நகைச்சுவை கலந்த காதல் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, போகன், சந்தோஷ் சுப்பிரமணியன், தனி ஒருவன், திக் திக் திக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ படம்
கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்கில் வெளியானது.
இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் உட்பட பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
ஆறுதல் சொன்ன பெண் ரசிகை கூட்டம்
இந்நிலையில், தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பெங்களூரில் PS2 நட்சத்திரங்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, மேடையில் நடிகர் ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, PS 2வில் நடித்த நட்சத்திரங்கள் மேடையில் தோன்றினர். மேடையில் படத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்த ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் எமோஷனலாகி அழ ஆரம்பித்தார்.
அப்போது, மேடையில் அழுத ஜெயம் ரவியை, நடிகர் விக்ரம் எழுந்து வந்து தேற்றினார். அப்போது, கூட்டத்தில் இருந்த பெண் ரசிகைகள் ஜெயம் ரவியைப் பார்த்து அழாதீங்க ஜெயம் ரவி... நாங்கள் இருக்கிறோம்.. என்று கூச்சலிட்டு கத்தினர்.
அப்போது, மேடையிலிருந்து எழுந்து ஓடி வந்த ஜெயம் ரவியை ரசிகைகள் கூட்டம் சூழ்ந்து கொண்டு அவரை கட்டியணைத்து ஆறுதல் படுத்தினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
That vibe ❤️?
— Saran Ajil JR (@Saran_ajil) April 24, 2023
Love u Ravi na ??@actor_jayamravi #JayamRavi #Arunmozhivarman @shiyamjack pic.twitter.com/EzJhDX6ppZ