ஜெயம் ரவி 18 கிலோ எடையை இரு வாரத்தில் குறைக்க இந்த 2 பொருளை தான் சாப்பிட்டாராம்! என்ன தெரியுமா?
இரண்டே வாரத்தில் 18 கிலோ உடல் எடையை நடிகர் ஜெயம் ரவி குறைக்க என்ன செய்தார் என்ற தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி.
தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
2 வாரத்தில் எடையை குறைத்தது எப்படி?
கோமாளி படத்தில் ஜெயம்ரவி இரண்டே வாரத்தில் 18 கிலோ எடையை குறைத்து இருந்தார்.
இரண்டு வாரத்திற்கு கேரட் மற்றும் தக்காளியை மட்டும் சாப்பிட்டேன். எப்போதாவது பிளாக் காபி குடிப்பேன்.
இதன் மூலம் தான் இரண்டே வாரத்தில் 18 கிலோ உடல் எடை குறைத்தேன்.
அதோடு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வேறு யாரும் இதை செய்ய வேண்டாம் என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.