ஐயாவில் பார்த்த அப்பாவி நயன்தாராவா இது? வியக்க வைக்கும் வளர்ச்சி
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தமிழில் ஐயா திரைப்படத்தில் குழந்தை போன்ற அப்பாவி முகத்துடன் அறிமுகமாகியிருந்தார்.
பல சர்ச்சைகளில் சிக்கினாலும் என்றுமே அவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறுமளவுக்கு இன்று அபார வளர்ச்சியை அடைந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் அழகான அம்சமான கவர்ச்சியான பெண்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் நயன்தாரா.
ஆனால் இணையத்தில் வைரலாகி வரும் நயன்தாராவின் பழைய புகைப்படங்கள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
இப்படி இருந்த நயன்தாரா மாறிவிட்டார் என பலருக்கும் கேள்விகள் எழாமல் இல்லை.
இந்த படங்களே அவரது கடுமையான உழைப்பிற்கும் சான்றாக இருக்கிறது, இன்றைய இளம் நடிகைகளுக்கு நயன்தாரா உத்வேகத்தை கொடுக்கிறார் என்றால் அது மிகையல்ல.
என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் கணவர் விக்னேஷ் சிவன், உயிர் மற்றும் உலகம் என்று தங்களின் இரண்டு அழகான இரட்டையர்களுடன் தங்கள் வாழ்க்கையின் சிறந்த கட்டத்தை அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |