விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’... வெளியானது ரிலீஸ் தேதி!
sigma new release date : தமிழ் சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் விஜய்.
நடிகராக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற ஒரு பிரபலமாகவும் திகழ்ந்து வருகிறார். தற்போது அரசியல் பயணத்தில் கவனம் செலுத்தி வரும் விஜய், ‘ஜன நாயகன்’ படத்துடன் தனது திரைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவரது மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஜேசன் சஞ்சய் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படம் முதலில் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை கருத்தில் கொண்டு ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
‘சிக்மா’ ரிலீஸ் தேதி
தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன், அட்வென்ச்சர் மற்றும் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ ஏற்கனவே ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ஜேசன் சஞ்சய்யின் முதல் படம் என்பதுடன், விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் என்பதால் ‘சிக்மா’ மீது ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
மேலும், படத்தின் கதைக்களம் மற்றும் உருவாக்கம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள தகவல்களும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.

இந்நிலையில், ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |