வீட்டை விற்றதற்கு காரணம் என்ன? நடிகர் நெப்போலியன் கூறிய உண்மை
நடிகர் நெப்போலியன் இந்தியாவில் தனது வீட்டை விற்றதற்கான காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம்.
நடிகர் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்றார். தனது மகனின் உடல்நிலை காரணமாக இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்றுள்ளார்.
சிறந்த நடிகராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் படம் ஒன்றினை தயாரித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நாஷ்வில் பகுதியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்காக அவரது மனைவி, மகன்கள் என பலரும் வேலை செய்துள்ளனர்.

நாஷ்வில் பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள், அதிகாரிகள் இப்படத்தில் நடித்து இருக்கின்றார்கள். இப்படத்தில் புது வீட்டை வாங்கும் நிலையில், வீடு பிண்ணனியில் காமெடி கலந்த பேய் படமாக எடுத்துள்ளார்.
இப்படத்திற்கு அமெரிக்க ஆவி என்று பெயர் வைத்துள்ள நிலையில், இனியும் சினிமா வேண்டாம், இப்படத்துடன் போதும் என்று குடும்பத்தினர் விரும்புவதாக கூறப்படுகின்றது.

வீட்டை விற்ற காரணம்
அமெரிக்க ஆவி பட டிரைலர் வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் நெப்போலியன் வசித்து வந்த வீட்டை ஏற்கனவே விற்றுள்ளார்.
சென்னை வந்தால் தற்போது நட்சத்திர ஹோட்டலில் தங்கிவரும் நிலையில், எதனால் தனது வீட்டை விற்றேன் என்ற காரணத்தை கூறியுள்ளார்.

அதாவது நெப்போலியன் எம்எல்ஏ, மந்திரியாக இருந்துள்ளார். அரசியலில் இருந்ததால், தற்போதும் அவ்வீட்டில் இவர் இருப்பதாக நினைத்து மக்கள் பலரும் மனு கொடுத்துள்ளனர்.
உதவிகள் கேட்டு இவ்வாறு மக்கள் மனு கொடுக்கும் நிலையில், எப்போதாவது ஒருமுறை மட்டுமே இந்தியா வருவதாகவும், வீட்டில் ஆயிரக்கணக்கில் மனுக்கள் சேர்ந்து இருப்பதாகவும், தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலை, மேலும் அவர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக தனது வீட்டை விற்றுள்ளதாக நெப்போலியன் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |