72 மணி நேரம் நினைவிழந்த ஜாஸ்மின் பாசின்! ‘வானம்’ பட நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
வானம்’ திரைப்படத்தில் சிம்புவின் காதலியாக நடித்த ஜாஸ்மின் பாசின், ஒரு விபத்துக்குப் பிறகு சுமார் 72 மணி நேரம் தனது நினைவுகளை இழந்திருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் எப்படி நடந்தது, அதன்பிறகு அவரது திரைப்பயணம் எப்படி மாறியது என்பது குறித்து ஜாஸ்மின் பாசின் பகிர்ந்துக்கொண்ட அனுபவம் பற்றி தவகலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை ஜாஸ்மின் பாசின்
சிம்பு நடிப்பில் வெளியான ‘வானம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஜாஸ்மின் பாசின். படத்தில் சிம்புவின் பணக்கார காதலியாக சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், அவரது அழகும் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக, அவரை மையமாக வைத்து இடம்பெற்ற ‘எவன் டி உன்ன பெத்தான்’ பாடல் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் இன்றுவரையில் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இருந்து வருகின்றது.

‘வானம்’ படத்துக்குப் பிறகு தமிழில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் தொடரவில்லை. அதன்பிறகு இந்தி தொலைக்காட்சி உலகில் கவனம் செலுத்திய ஜாஸ்மின், சீரியல்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
‘தில் சே தில் தக்’ தொடர் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். ‘பிக்பாஸ்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், ‘கத்ரோன் கே கில்லாடி’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜாஸ்மினுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு சாகசப் பணியின் போது உயரத்தில் இருந்து நீரில் குதித்தபோது, அவரது தலையில் அடிபட்டடுள்ளது.உடனடியாக அவரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.

72 மணி நேரம் என்ன நடந்தது என்றே தெரியாது!
இந்த விபத்து குறித்து சமீபத்தில் பேசிய ஜாஸ்மின், விபத்து நடந்த நாளில் இருந்து அடுத்த 72 மணி நேரம் வரை தனக்கு என்ன நடந்தது என்பதே நினைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் தன்னைச் சுற்றி நடந்த சம்பவங்கள் எதுவும் நினைவில் இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் தான் விபத்து குறித்து தெரிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூளையில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஜாஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு விபத்து காரணமாக 72 மணி நேரம் தனது வாழ்க்கையில் நடந்ததையே நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போன அனுபவம், ஜாஸ்மினின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவே அமைந்துள்ளது. குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |