சூடான சாதத்திற்கு யாரும் செய்திராத ஜப்பானீஸ் சிக்கன் குழம்பு! இதோ ரெசிபி.. செய்து அசத்துங்க
பொதுவாக வீடுகளில் ஞாயிற்றுகிழமை வந்து விட்டால் அசைவ உணவுகளுக்கு பஞ்மே இருக்காது.
அப்படி இந்த வாரமும் வீட்டில் அசைவ உணவுகள் செய்ய போவது என்றால் ஜப்பானீஸ் சிக்கன் குழம்பு செய்யுங்கள்.
இந்தியர்களின் குழம்பை விட இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஞாயிற்றுகிழமையை இன்னும் ஸ்பெஷலாக்க இது ஒரு சூப்பரான ரெசிபியாக இருக்கும்.
வித்தியாசமான சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் ஜப்பானீஸ் சிக்கன் குழம்பு எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* மைதா - 3 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய கேரட் - 1 (நறுக்கியது)
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* சிக்கன் ஸ்டாக் - 2 கப்
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் தேவையானளவு சிக்கனை எடுத்த மஞ்சள்த்தூள் கலந்து நன்றாக கழுவி விட்டு அதில் மைதா, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் உருளைக்கிழங்கு, கேரட் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
அதே சட்டியில் எண்ணெய் விட்டு சிக்கனை அதில் போட்டு 2 -3 நிமிடங்கள் வரை வைத்து விட்டு அதையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
வேறொரு வாணலியை எடுத்து அதில் வெண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து வதக்கிய வெங்காயத்துடன் குழம்பு தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசம் போகும் வரை லேசாக அடுப்பில் வைத்திருக்கவும்.
அத்துடன் இடையில் மை மா கலந்து கொள்ளவும். வதங்கிய பின்னர் சிக்கன் ஸ்டாக்கை மெதுவாக கலந்து விட்டு கொள்ளவும். அதில் சோயா சாஸ், சர்க்கரை, உப்பு, தக்காளி கெட்சப் ஆகியவற்றை சேர்ந்து நன்றாக கலந்து விட்டு கொள்ளவும்.
இறுதியாக சிக்கனை மிதமான வெப்பநிலையில் வேக விட்டு இறக்கினால் சுவையான ஜப்பானீஸ் சிக்கன் குழம்பு தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |