நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிறந்தவரா?
ஒவ்வொரு நாளுமே நல்ல நாள்தான். யாரும் நாம் இந்த நாளில்தான் பிறக்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டு பிறப்பதில்லை. ஆனால், நாம் பிறக்கும் கிழமை எமது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு முறையில் தாக்கம் செலுத்துகின்றது என்பது முற்றிலும் உண்மை.
சரி இனி ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களின் குணநலன்களைப் பார்ப்போம்...
பொதுவான குணங்கள்
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் அதிர்ஷ்டமானவர்களாக கருதப்படுகிறார்கள். தலைமைப் பண்புகள் அதிகமாகக் காணப்படும். மற்றவர்களை விட ஒரு படி மேலே இருக்க வேண்டுமென விரும்புவர். மற்றவர்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர்கள்.
தொழில்
மருத்துவத் தொழில், நிர்வாகச் சேவை போன்ற துறைகளை பெரும்பாலும் தெரிவு செய்வார்கள். வெற்றி மனப்பான்மை உடையவர்கள். அவர்களிடம் போட்டித்தன்மை எப்பொழுதும் இருக்கும். சவால்களை ஏற்க விரும்புவார்கள்.
அதிர்ஷ்ட இலக்கம்
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களுக்கு எண் 1 அதிர்ஷ்டமான நாளாக இருக்கிறது.
அதிர்ஷ்ட நிறம்
மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் அதிர்ஷ்டம் தருபவையாக இருக்கின்றன.
காதல்
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் நேர்மையானவர்களாக இருந்தாலும் அடிக்கடி தங்கள் வலி மிகுந்த வார்த்தைகளால் துணையை காயப்படுத்துவார்கள். இவர்கள் சுயநலவாதிகளாக இருப்பதால் எப்பொழுதுமே தங்கள் காதலில் திருப்தி அடைய மாட்டார்கள்.
தங்கள் காதலை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால், இவர்கள் முடியுமானவரை சமரசம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
திருமணம்
திருமணத்தை புனிதமான ஒரு உறவாக கருதுவார்கள். திருமணத்துக்கு முன்பு சுதந்திரமாக இருந்ததால், திருமணத்துக்கு பின்பு அதை ஒரு சுமையாக பார்க்கக்கூடும். சில வேளைகளில் அவர்களின் திருமண வாழ்க்கையில் தடைகள் நிறைந்திருக்கலாம்.
இருப்பினும் அவ்வளவு எளிதாக தங்களது திருமண உறவை இவர்கள் முறித்துக்கொள்ள மாட்டார்கள்.