மேகம் கருக்காதா பாடலின் அன்சீன் காட்சி! வாவ்..செம்ம க்யூட் ரியக்சன் - வைரலாகும் வீடியோ
மேகம் கருக்காதா பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை போலவே, படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கொண்டாடப்பட்டிருந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு, திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம், நடிகர் தனுஷ் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீண்டும் இணைந்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது மேகம் கருக்காதா பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜானி மாஸ்டர் வெளியிட்டுள்ளார்.
மேலும் தனது கேப்ஷனில், பாடலுக்கு அமோகமான வரவேற்பை அளித்ததற்கு நன்றி என்றும் ஜானி மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
மேகம் கருக்காதா பாடலின் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை அடுத்து, இந்த பாடலின் BTS வீடியோவும் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.
Immensely cherished choreographing @dhanushkraja Sir #RaashiKhanna ma'am & @MenenNithya garu for #MeghamKarukatha ?
— Jani Master (@AlwaysJani) September 26, 2022
Thank you for the phenomenal response to the song & #Thiruchitrambalam ❤
Here's how it went behind the screens ? pic.twitter.com/FtXlsa3jgk