கருப்பு பேரழகி! சேலையில் வசீகரிக்கும் லாஸ்லியாவின் புகைப்படங்கள்
இலங்கையை சேர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியநேசன், பிக்பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் உலகம் முழுவதும் பிரபல்யமானார்.
இலங்கையின் கிளிநொச்சியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த லாஸ்லியாவின், தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
பின்னர் அவர்கள் திருகோணமலைக்கு இடம்பெயர, கல்வியை அங்கு பயின்றார், தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார்.
பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.
அதன் பின்னர் தமிழ் திரைப்படங்களில் வாய்ப்புகள் அமைந்தது, இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது.
அடுத்ததாக வெளியான கூகுள் குட்டப்பா எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில் இவர் கருப்பு நிற சேலை அணிந்து கொண்டு வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.