வெறித்தனமான ரீல்ஸ் செய்து வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்த தனலெட்சுமியின் ரீல்ஸ் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நேற்றைய தினத்தோடு, மிகவும் கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் விதம் சுமார் 16 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதனை தொடர்ந்து கதிரவன் மற்றும் அமுதவாணன் இருவரும் பணப்பெட்டியுடன் வெளியேறினார்கள்.
இவர்களை தொடர்ந்து ஃப்னிலிட்டில் மைனா, சிவின், அசீம்,விக்ரமன் ஆகிய நான்கு போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதில் மைனா இரவோடு இரவாக மைனா நந்தனி எவிக்ஷனில் சிக்கப்படி வெளியேறினார். தொடர்ந்து சிவின் வெளியேற்றப்பட்டுள்ளார்.
தனலெட்சுமியின் கடமையுணர்வு
இந்நிலையில் இறுதி போட்டிக்கு விக்ரமன் மற்றும் அசீம் கலந்துக் கொண்டார்கள், அதில் அசீம் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், வெளியேறிய ஒவ்வொரு போட்டியாளர்களும் தன்னுடைய பணிகளை தொடர்ந்து வருகிறார்கள். இதன்படி, தனலெட்சுமி வெளியேறிய நாளிலிருந்து தங்களின் ரீல்ஸ் பணிகளை தொடர்ந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் உடம்பு பகுதி முழுவதும் கருப்பு நிற மை பூசிக் கொண்டு வீடியோ ஒன்று செய்து வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி தனலெட்சுமி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உன்னுடைய கடமையுணர்விற்கு அளவில்லையாம்மா என கலாய்த்துள்ளார்கள்.