திடீரென இலங்கை வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த பிரபலம்! ஷாக்கில் உறைந்த நெட்டிசன்கள்
தென்னிந்திய நடிகை ஜனனி நேற்றைய தினம் இலங்கைக்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஜனனி ஐயரின் வாழ்க்கை பயணம்
நடிகை ஜனனி ஐயர் இயக்குநர் பாலாவின் “அவன் இவன்” என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அது அவருக்கு பெரியதாக வரவேற்பை தரவில்லை.
மேலும் இப்படியான ஒரு நிலையில் பிக்பாஸில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் கொஞ்சம் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து தற்போது ஜனனி ஐயர் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இறங்கி விட்டார்.
இலங்கை வந்துள்ளாரா?
இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனியார் வணிக நிறுவனமொன்றின் திறப்பு விழாவில் பிரதம விருந்தினாராக கலந்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த இலங்கை மக்கள் நடிகை ஜனனியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இலங்கை ரசிகர்கள், நடிகை ஜனனிக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.