Jamun Fruit: நாவல் பழத்தை யார் எவ்வளவு சாப்பிட வேண்டும்?
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட நாவல் பழத்தின் நாம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும்எ ன்பதை தெரிந்து கொள்வோம்.
நாவல் பழம்
நாவல் பழத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்டுகள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. தற்போது நாவல்பழம் சீசன் ஆரம்பித்துள்ளது.
அந்தந்த காலப்பருவத்தில் வரும் பழங்களை கட்டாயம் நாம் வாங்கி சாப்பிட வேண்டும். இந்நிலையில் நாவல் பழத்தினை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நாவல் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஜாம்போலின் உள்ளதால், இது மாவுச்சத்தை சர்ச்சரையாக மாற்றுவதை கட்டுப்படுத்துகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கின்றது.
நார்ச்சத்து அதிகம் கொண்ட இது செரிமானத்திற்கு உதவுவதுடன், மலச்சிக்கலையும் தடுக்கின்றது. குடல் ஆரோக்கியத்தில் சிறந்த பங்கு வகிக்கின்றது.
புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதுடன், ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
தோல் அழற்சி அபாயத்தை குறைப்பதுடன், சருமத்திற்கு பொலிவு சேர்த்து, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்கின்றது.
ஈறு நோய்களை தடுப்பதுடன், வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் இது உதவுகின்றது. வாய் புண்களுக்கு சிகிச்சை அளிக்கின்றது.
எவ்வளவு சாப்பிட வேண்டும்?
நாவல் பழத்தினை குழந்தைகள் 50 முதல் 75 கிராம் சாப்பிடலாம். ஒவ்வாமை செரிமான பிரச்சனை ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியம்.
பெரியவர்கள் 100 முதல் 150 கிராம் வரை சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் 50 முதல் 100 கிராம் வரை இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரைப்பை குடல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லதாகும். சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |