ஃப்ரிட்ஜில் இந்த சீக்ரெட் தெரியுமா? பொருட்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும்?
குளிர்சாதனப்பெட்டியில் பொருட்களை சேகரிக்கும் போது எந்த பொருட்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டி
இன்று பெரும்பாலான வீடுகளில் பல மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று தான் குளிர்சாதனப்பெட்டி.
அதிகபட்ச நன்மைகளை பெற்றுக்கொள்ள உதவும் இதில் மறைக்கப்பட்ட பட்டனைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
குளிர்சாதனப்பெட்டியில் உணவுகள் வைத்தால் கெட்டுப்போவதாகவும், அதிக நேரம் கெடாமல் இருப்பதில்லை என்று பலரும் கூறிவரும் நிலையில், அந்த ரகசிய பட்டன் சிக்கலை தீர்க்குமாம்.
இதனை சரியாக பயன்படுத்தினால் உணவு நீண்ட நேரம் கெடாமல் வைத்திருக்க முடியும்.
ரகசிய பட்டன் என்ன?
குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் வெப்பநிலை பட்டனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த பட்டனானது பொதுவாக பூஜ்ஜியத்திலிருந்து ஐந்து வரையிலான எண்கள் அதில் எழுதப்படும்.
பெரும்பாலான மக்கள் இதை டிகிரி செல்சியஸுடன் தொடர்புபடுத்துகிறார்கள். ஆனால் இது உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் திறனைக் காட்டுகிறது.
உணவு தரநிலை ஏஜென்சியின் கூற்றுப்படி, குளிர்சாதனப் பெட்டியை 5 Cக்கும் குறைவாக வைக்க வேண்டும்.
ஏனெனில் 8 Cக்கும் அதிகமான வெப்பநிலை பாக்டீரியாக்கள் வேகமாக வளர வழிவகுப்பதுடன் உணவும் சீக்கிரமாக கெட்டுப் போய்விடுமாம்.
ஆதலால் அதில் கொடுத்திருக்கும் கையேட்டைப் பார்த்து வெப்பநிலையை அமைப்பது நல்லது.
இதை சரிபார்க்க, ஒரு தெர்மாமீட்டர் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரை நடுத்தர அலமாரியில் இரவு முழுவதும் வைத்து பார்த்தால் சரியான வெப்பநிலை தெரியும்.
சமைத்த உணவை மேல் அலமாரியில் வைக்க வேண்டும் மற்றும் பச்சை இறைச்சியை கீழே வைக்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை வெவ்வேறு இடங்களில் வைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |