இலங்கையில் பௌத்தம் ஆரம்பமான இடத்தின் தற்போதைய நிலை! முழுமையான வரலாறு
நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இலங்கையின் ஒவ்வொரு இடமும் ஒரு வரலாற்றைப் பேசும் விதமாகத்தான் அமைந்துள்ளது.
அந்த வகையில் பேரரசன் அசோகனின் மகள் சங்கமித்தை இலங்கைக்கு வந்திறங்கிய இடம் தான் சம்புத்துறை இது பண்டைய காலத்தில் ஜம்புகோளப்பட்டிணம் என அழைக்கப்பட்டது.
இவளும், இவளுடன் இரட்டைப் பிள்ளைகளுள் ஒன்றாகப் பிறந்த உடன் பிறந்தவருமான மகிந்தனும் புத்த சமயத் துறவிகள் ஆயினர். வரலாற்றின் அடிப்படையில் சங்கமித்தை அசோகனின் இளைய மகளும் மகிந்தனின் தங்கையும் ஆவாள்.
சங்கமித்தை மற்றும் மகிந்தன் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காக இலங்கைக்கு வந்தாக இலங்கையின் பௌத்த வரலாற்று நூலாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
சங்கமித்தை இலங்கைக்கு முதற்தடவையாக வெள்ளரசு மரக்கிளையினைக் கொண்டுவந்த இடத்தில் நினைவுச்சின்னம் ஒன்றும் விகாரை ஒன்றும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் இந்த இடத்திற்கு சென்று பார்வையிடுவதுடன் இந்த பௌத்த விகாரையிலும் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சிறப்புமிக்க தளத்தின் முழுமையான வரலாற்று பின்னணியை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |