பூனை குறுக்கே போனால் அபசகுணமா? உண்மை காரணம் இதுதான்
நாம் வெளியே செல்லும் போது பூனையை பார்த்தாலோ அல்லது பூனை குறுக்கே போனாலோ இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அது துர்திஷ்டமாக கருதப்படுகிறது.
பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது அபாசகுனமாகக் கருதப்படுகின்றது. இப்படி ஒரு நம்பிக்கை இருப்பதால், பலர் பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று,தண்ணீர் குடித்துவிட்டு செல்ல வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் காரணம்
இவ்வாறு முன்னோர்கள் குறிப்பிட்டமைக்கு பின்னால் உண்மையில் என்ன காரணம் இருக்கின்றது என சிந்தித்திருக்கின்றீர்களா? பழங்காலத்தில் மக்கள் காடு வழியாகச் பயணம் செய்ய வேண்டிய தேவை இருந்தது.
ஆனால் தற்காலத்தில் காணப்படுவதை போன்று அப்போது வாகன வசதி எதுவும் கிடையாது. மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி ஆகியன மாத்திரமே காணப்பட்டது.
பூனைகள் இரவில் வேட்டையாடும்.அதனால் பூனைகளின் கண்கள் இரவில் ஒளிரும். குதிரைகள், காளைகள், பறவைகள் போன்ற விலங்குகள் இரவில் பூனையின் கண்களைக் கண்டு பயப்படுகின்றன.
மாட்டு வண்டியில் பயணம் செய்யும் போது பூனை குறுக்கே சென்றால் மாடுகள் பூனையை பார்த்து பயந்து திசைமாறி செல்லவும் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் எனவே தான் பூனை குறுக்கே சென்றால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
அதுவே இப்போது வரை பூனை குறுக்கே சென்றால் துரதிர்ஷ்டம் என கருதப்படுவதற்கு உண்மையான காரணம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |