சீனா தென் கொரியாவை அடுத்து இஸ்ரேலிலும் புதிய வகை கொரோனா - அறிகுறிகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் ஆனது பல நாடுகளில் குறைந்தாலும், சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.
அதன்படி, கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 6 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து இருக்கிறது. ஒரு பக்கம் சீனா மறுபக்கம் தென் கொரியாவிலும் அதிகரித்து வருகின்றன.
இதனைத்தொடர்ந்து, இஸ்ரேலில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது.
இது ஒமிக்ரோனின் 2 துணை வகைகள் இணைந்து புதிய வைரஸ் தோன்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
மேலும் இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த புதிய வகை வைரஸ் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
குறைந்த காய்ச்சல், உடல்வலி மற்றும் தலைவலி ஆகியவை புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் லேசான அறிகுறிகளாகும்.
இந்த மாறுபாட்டால் ஏற்படும் நோய்க்கு சிறப்பு சிகிச்சை தேவையில்லை என்று கூறப்படுகிறது.