வெள்ளை சர்க்கரை அசைவமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே காலையில் எழுந்தவுடன் நாம் குடிக்கும் காபி, டீயில் ஆரம்பித்து இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் அருந்தும் பால் வரையில் அனைத்து பொருட்களிலும் நிச்சயம் சர்க்கரை இடம் பிடித்து விடுகின்றது.
நாம் அன்றாடம் சாப்பிடும் கேக், பிஸ்கட், ஜூஸ், சாக்லேட், மற்றும் இனிப்பு வகைகள் என குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பல்வேறு உணவுகிளின் முக்கிய மூலப்பொருளாகவும் சர்க்கரை காணப்படுகின்றது.
கோவில்களில் செய்யப்படும் பொங்கல், பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களிலும் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சைவ உணவை மட்டும் உண்பவர்கள், அசைவ உணவை உண்பவர்கள், வீகன் வாழ்க்கை முறையை பின்பற்றுவர்கள் என அனைவரும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சர்க்கரை அசைவம் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
ஆம் சர்க்கரை ஒரு அசைவ உணவு. அதற்காக காரணம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை சர்க்கரை அசைவமா?
நாம் சாப்பிட கூடிய அதிகப்படியான உணவு வகைகளில் சர்க்கரை என்பது பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது.
குறிப்பாக வெள்ளை சர்க்கரை என்பது இவற்றில் பெரிதும் பயன்படுத்த கூடிய ஒன்றாகும். அதே போன்று வீடுகளிலும் வெள்ளை சர்க்கரையை பெரிதும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் பல இனிப்பு பிரியர்களுக்கு வெள்ளை சர்க்கரை இன்றியமையாதது.
ஆனால் நாம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் வெள்ளை சர்க்கரையில் மாட்டின் எலும்புகள் உட்பட விலங்குகளின் எலும்புகள் பயன்படுத்தப்படுகிறதாம்.
விலங்கு எலும்பு கரியிலிருந்து வெள்ளை சர்க்கரை பளபளப்பான வெள்ளை நிறத்தைப் பெறுகிறது என்று கூறப்படுகுறது.
நம் வீடுகளில் நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பொதுவாக வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்க விலங்குகளின் எலும்பு கரியுடன் தயாரிக்கப்படுவது தான் காரணமாம்.
ஆனால், எல்லா நிறுவனங்களும் எலும்பு கரியைப் பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையில் விலங்கு கரி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஏன் எலும்பு கரி பயன்படுத்தப்படுகிறது?
சர்க்கரை சுத்திகரிப்பில் சில முக்கிய நிலைகள் காணப்படுகின்றது. அதில் ஒன்றுதான், விலங்கு கரி பயன்படுத்துதல். அதாவது விலங்குகளின் எலும்பைக் கொண்டு சர்கரை சுத்திகரிக்கப்படுவதாக அறியப்படுகின்றது.
அதாவது, விலங்குகளின் எலும்பை எரித்து அதன் மூலம் கிடைக்கும் கரியானது, எலும்பு கரி என குறிப்பிடப்படுகின்றது.அதன் மூலம் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை சுத்திகரிக்கப்படுகின்றன.
சர்க்கரை மேலும் பளபளப்பாக, வெள்ளையாக காட்டப்படுவதற்காக இது செய்யப்படுகிறது என அறியப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் இருந்து இதற்காக மாட்டின் எலும்புகள் மூலம் செய்யப்படும் இயற்கை கரிகள் உலகம் முழுவதும் உள்ள சர்க்கரை தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதிப் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்ப்படுகின்றது.
இது எந்தெந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் படுகிறது என்று கண்டறிவது மிகவும் கடினமான விடயமாகும். அதனை தாங்களே முன்வந்து ஒப்புக்கொண்டால் மட்டுமே சாத்தியம்.
மேரிலாண்டை சேர்ந்த சைவ வள அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், ஒரு சுத்திகரிப்பு ஆலையில் சுமார் 7,800 மாடுகளை இதற்காக பயன்படுத்துத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் தெளிவான வெள்ளை நிறத்தை அடைய எலும்பு கரி தேவைப்படுவதால், பெரும்பாலான சுத்திகரிக்கப்பட்ட கரும்பு சர்க்கரைகள் வீகன் வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களுக்கு உகந்தல்ல.
விலங்கு கரிகள் என்று அழைக்கப்படும் இயற்கை கரிகள் எரித்து கரியாக்கிய பிறகு அசைவம் இல்லை, சைவம்தான் எனவும் சில தரப்பினர்கள் வாதிடுகின்றனர். ஆனால் விலங்குகளை கொல்லும் எதையும் உண்ணாத விலங்குகளை சுரண்டி வாழும் வாழ்க்கையை முற்றாக எதிர்க்கும் வீகன்களுக்கு இது பொருந்தாது.
தற்போது சில நிறுவனங்கள் தங்களது சர்க்கரையில் எலும்பு கரி பயன்படுத்துவது இல்லை என்று சான்றிதழ்களை வைத்துள்ளனர். வீகன்கள் அவற்றை வாங்கி பயன்படுத்தலாம், அல்லது இதற்கு மாற்றாக கரும்பு சர்கரை அல்லது பீட் சர்க்கரை பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |