சர்க்கரை நோயாளி ஸ்வீட் கார்ன் சாப்பிடலாமா? மருத்துவர் விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக ஸ்வீட் கார்ன் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுற்றுலா செல்லும் போது குழந்தைகளுடன் அதிகம் வெளியில் பயணிக்கும் பொழுது இது போன்ற உணவுகள் அதிகமாக எடுத்து கொள்ள வாய்ப்பு இருக்கின்றது.
இப்படி சாப்பிடும் ஸ்வீட் கார்னில் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கின்றது. இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் என நினைத்து கொண்டிருப்போம்.
ஆனால் அது உண்மையல்ல. மாறாக வரம்பு நிர்ணயித்து சாப்பிடும் பொழுது பக்க விளைவுகளை கட்டுபடுத்தலாம்.
இது போன்று சாப்பிடுவதால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்களை பெற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில் ஸ்வீட் கார்ன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அப்படி என்றால் என்ன மாதிரியான விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதனையும் தெரிந்து கொள்வோம்.
ஸ்வீட் கார்ன் சாப்பிடலாமா?
1. இனிப்பு சோளம் சுவையுடன் ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதில், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தாலும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவியாக இருக்கின்றது.
2. ஸ்வீட் கார்னில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
3. சோளத்தை வேக வைத்து எடுக்கும் பொழுது அதிலிருக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவானது 52 குறியீடு அளவு உள்ளது. இது செரிமானத்தின் போது உடலில் படிப்படியாக உடைந்து இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது.
நீரிழிவு நோயாளிகள் எடுப்பது சரியா?
ஸ்வீட் கார்ன் சாப்பிடுவது சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். அளவாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் பெரிதாக இருக்காது. ஏனெனில் இது உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு குளுக்கோஸ் அளவையும் குறிப்பிட்ட அளவு உயர்த்துகிறது. அத்துடன் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆற்றலையும் அளிக்கிறது.
ஸ்வீட் கார்ன் ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?
- கலோரி - 77
- கார்போஹைட்ரேட் -17.1 கிராம்
- நார்ச்சத்து - 2.4 கிராம்
- சர்க்கரை - 2.9 கிராம்
- கொழுப்பு -1.1 கிராம்
- வைட்டமின் ஏ
- வைட்டமின் பி
- வைட்டமின் சி
- பொட்டாசியம்
- மெக்னீசியம்
- இரும்பு
- புரதம்
- துத்தநாகம்