2024 புத்தாண்டில் உங்க வளர்ச்சியை அதிகரிக்க சில டிப்ஸ்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக புத்தாண்டு துவங்கும் போது நம் கடந்த ஆண்டு விடும் தவறுகளை இனி செய்யக் கூடாது என சபதம் எடுத்து கொள்வோம்.
அப்படியாக சமூக ஊடகங்களை விட்டு வெளியேறுங்கள், உடல் எடையைக் குறைக்கவும், மதுவைக் குறைக்கவும், இப்படி ஏகப்பட்ட தவறுகளை குறிப்பிட்டு மாற்ற வேண்டும் என நினைப்போம்.
ஆனால் இது சில சமயங்களில் வெறும் சபதங்களாகவே போய் விடும். திருத்த வேண்டும் என நினைத்த காரியங்களை தான் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்.
இவ்வாறு 2023 ல் நாம் விட்ட தவறுகளை இனி வரும் காலங்களில் தொடர வேண்டாம் என நினைப்பவர்கள் சில டிப்ஸ்களை கையாளுவதன் மூலம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கலாம்.
அந்த வகையில் 2024 புத்தாண்டில் நாம் நினைத்த காரியங்கள் கைக் கூட வேண்டும் என்னென்ன விடயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
புத்தாண்டில் செய்ய வேண்டியவை
1. நண்பர், ஊழியர்கள், உறவினர் என அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும். உறவுகளின் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் உங்களின் மனநிலையில் மாற்றங்களை காணலாம். அன்பினால் நினைத்த காரியங்களை இலகுவாக செய்யலாம்.
2. புதிய விஷயங்களை ஆராய்வதற்கும் முயற்சி மற்றும் புதிய அனுபவங்களை பெற முயற்சிக்க வேண்டும். இது உங்களுக்கான பாதையை சீர்ப்படுத்தும். அத்துடன் செழுமையான அனுபவத்தையும் பரிமாணத்தையும் சேர்க்கும்.
3. செல்போன் பாவனை, விளையாடுதல், நண்பர்களுடன் ஊர் சுற்றுதல் இப்படி இருக்காமல் உங்களின் பொழுதை புதுவிதமான செயற்பாடுகளால் கழியுங்கள். வெவ்வேறு கலாச்சாரங்களுக்குள் நுழையுங்கள் மற்றும் அதைப் பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். இது போன்ற செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல இணக்கபாடை உருவாக்கும்.
4. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்பது ஒரு முக்கியமான தீர்மானமாக இருக்கலாம். புதுவிதமான முயற்சிகளில் ஈடுபடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. நேர்மறை டிஜிட்டல் இருப்பை பராமரிக்கவும் மற்றும் உங்கள் சமூக ஊடக தளங்களை ஆக்கபூர்வமான ஈடுபாட்டுடன் பயன்படுத்தவும். ஆன்லைனில் காட்டப்படும் மற்றவர்களின் அனுபவங்கள், செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் ஈடுபாடுகளால் பாதிக்கப்படாதீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |