1gm Gold: உண்மையில் தங்கம் தானா? அதிகமாக வாங்குவது லாபமா?
ஒரு கிராம் தங்க நகை வாங்கும் பழக்கம் தற்போது வைரலாகி வரும் நிலையில், அதில் எவ்வளவு தங்கம் சேர்க்கிறார்கள் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தங்க விலை உச்சம்
பொதுவாக பெண்களுக்கு தங்கம் என்றாலே பிடிக்காமல் இருக்காது.
பண்டிகை நாட்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் என அனைத்து இடங்களுக்கும் தங்கம் அணிந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தங்க நகைகள் வைத்திருப்பது இந்தியா போன்ற நாடுகளில் ஒரு கௌரவமான விடயமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் இன்று வரை தங்க நிலவரம் உச்சத்தையே தொட்டு வருகிறது. இதனால் நகை பிரியர்கள் கிராம் கணக்கில் நகையை வாங்கி சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இது தான் இப்படி இருக்கிறது என்றால் வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
ஒரு கிராம் தங்க வாங்குவது லாபமா?
அந்த வகையில், ஒரு கிராம் தங்க நகைகள் வாங்குவது, பயன்படுத்துவது, பரிசு கொடுப்பது என மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. நாம் கடைகளில் பார்க்கும் ஒரு கிராம் தங்க நகையானது செம்பு, பித்தளை மற்றும் பிற உலோகங்கள் கொண்டு செய்யப்படுகிறது.
அதில் தங்கம் எவ்வளவு இருக்கிறது என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் இந்த நகைகள் எலக்ட்ரோபிளேட்டிங் அல்லது தங்க படலம் அடுக்கு கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது.

உதாரணமாக, 1 கிராம் 22K தங்கத்தின் விலை சுமார் ரூ. 11 ஆயிரமாக இருக்கும் பொழுது 1 கிராம் தங்க நகை என கூறி சமூக வலைத்தளங்களில் வெறும் ரூ.80 முதல் ரூ.500 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நகைகள் குறித்து சில விடயங்களில் மக்களுக்கு தெளிவு வேண்டும். நீங்கள் நினைப்பது போன்று ஒரு கிராம் தங்க நகையை அவ்வளவு குறைவான விலைக்கு யாரும் தரமாட்டார்கள்.
குறைவான விலையில் இருப்பது தங்கமா?
1. ஒரு கிராம் தங்க நகைகளுக்கு சந்தையில் ரீசேல் மதிப்பு இல்லை. வெறும் தங்கம் போன்ற ஆபரணங்களுக்க மாத்திரமே ரீசேல் உள்ளது. ஆனால் கடைக்காரர்களை தவிர இதை யாரும் வாங்க விரும்பமாட்டார்கள்.

2. ஒரு கிராம் தங்க நகைகள் குறைவான விலையில் கிடைப்பதால் வீட்டில் நடக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு வாங்கி அணிகிறார்கள். இவை பார்ப்பதற்கு தங்கம் போன்று இருந்தாலும், இதில் பணத்தை செலவு செய்வது பலனற்றது.
3. தங்கம் விலை உச்சத்தை தொடும் சமயத்தில் ஒரு கிராம் தங்க நகைகளை தினமும் அணிவதற்காக பலரும் வாங்கி அணிகிறார்கள். தினமும் பயன்படுத்தும் பொழுது அதன் தரம் மற்றும் நிறத்தில் வேறுபாடு இருக்கும். இது மக்களை கவரும் நோக்கத்திற்காக சந்தையில் பிரபலமாக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |