நூடுல்ஸில் பனீர் சேர்த்து சாப்பிடுறீங்களா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உடன் பனீர், காய்கறிகள் சேர்த்து சாப்பிட்டால் நூடுல்ஸினால் ஏற்படும் தீங்கு குறையுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நூடுல்ஸ்
இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது அதிகமான ஃபாஸ்ட் புட் கடைகள் வந்துள்ள நிலையில், இரவு நேரங்களில் துரித உணவினை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதிலும் வெறும் 2 நிமிடங்களில் தயாராகும் நூடுல்ஸ் குழந்தைகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். இதன் சுவைக்கு அடிமையாவதால் இவ்வாறான பழக்கத்திலிருந்து மீள முடியாமல் இருக்கின்றனர்.
ஆனால் நம்மில் பெரும்பாலான நபர்கள் நூடுல்ஸ் கெடுதல் என்றாலும், அதனை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடும் போது தீங்கு குறைப்பதாக நம்புகின்றனர்.

நூடுல்ஸின் தீங்கு குறையுமா?
உணவியல் நிபுணர் கூறுகையில், கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களில் அதிகளவில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, உப்பு மற்றும் பதப்படுத்திகள் உள்ளதாகவும், இவை உடலுக்கு தீங்கை ஏற்படுத்தாக கூறுகின்றார்.
இவற்றில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், செரிமானத்தில் தாமதம் ஏற்பட்டு திடீரென சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் ஜங்க் புட் குறைவாக சாப்பிடுவதற்கு வலியுறுத்தப்படுகின்றது.
ஆனால் பனீர் சேர்ப்பதால், புரதத்தின் அளவு அதிகரித்து, சர்க்கரை அளவை மெதுவாக உறிஞ்சப்படுகின்றது. விரைவாக சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், வயிறு நிறைந்த உணர்வினையும் கொடுக்கின்றது.

பனீர் சேர்ப்பதால் ஊட்டச்சத்து தன்மை மேம்படுகின்றது, ஆனாலும் நமது ஆரோக்கியத்திற்கு முற்றிலும் நல்லது என்று எடுத்துக் கொள்ள முடியாது.
ஆகவே நூடுல்ஸ் உடன் காய்கறிகள், பனீர் சேர்த்து சாப்பிடுவதால் சிறிது சத்தானதாக மாறும். அதுவே அதிகளவில் எண்ணெய் மற்றும் மசாலா சேர்ப்பது உடம்பிற்கு துீமையே ஏற்படுகின்றது.
கோதுமை, தானிய நூடுல்ஸ் இவற்றினை எடுத்துக் கொண்டால் ஓரளவிற்கு உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த முடியும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |