வெறும் வயிற்றில் டீ குடித்தால் இவ்வுளவு ஆபத்தா?
வெறும் வயிற்றில் டீ குடித்தால் என்ன பிரச்சனை ஏற்படலாம் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
டீ
பொதுவாக காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காபி பருகுவதை தான் பெரும்பாலான நபர்கள் விரும்புகின்றனர்.
உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதாக நம்பும் நிலையில், இந்த பழக்கம் சில ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிகப்படியான டீ உட்கொள்வது நீரிழப்பு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் டீ குடித்தால் என்ன பிரச்சனை வரும் என்று இங்கு கீழே காணலாம்
என்ன ஆகும்
நாம் டீயில் அதிக சர்க்கரை போட்டு குடிப்பதால் இது நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால் சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது. அது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால் நம் நுரையீரலும் பாதிப்படையலாம்.
நாம் வெறும் வயிற்றில் டீ குடித்தால் இது நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் காலையில் எழுந்ததும் டீ குடிக்காமல் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகே டீ குடிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி இரவில் டீ குடிப்பதால் உங்கள் தூக்கத்தையும் பாதிக்கும். கிரீன் டீ அதிகமாக குடித்தால் நம் உடலில் அனீமியா பாதிப்பு ஏற்படலாம்.
சூடாக டீ குடிப்பதால் நம் செரிமான மண்டலம் பாதிக்க்ப்படும். அது மட்டுமின்றி இது வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதனால் டீயை ஆற விட்டு குடிப்பது நல்லது.

நாம் டீயுடன் சேர்த்து சாப்பிடும் பொருள்களில் நிறைய கொழுப்புகள் இருப்பதால் இது நம் செரிமானத்தை பாதிக்கும். இதனால் எடை கூடும் அபாயமும் உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |