இளநீர் குடிக்கும் போது நேரடியாக குடிப்பது நன்மை தருமா?
ஆண்டு முழுக்க கிடைக்கக்கூடிய இளநீரில் உடலுக்கு தேவையான பயன்கள் என்னென்ன கிடைக்கின்றன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இளநீர்
இளநீர் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. பொதுவாக கோடை காலங்களில் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பானங்களை குடிப்பது வழக்கம்.
இளநீர் இதற்கு சிறந்தது. இது இயற்கையானது இதில் எந்த விதமான இரசாயனங்களும் சேர்க்காமல் சுவையாக இருக்கும். இதனாலேயே மக்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்.
இதில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன. சாலையோரங்களில் விற்கப்படும் இந்த இளநீரை வாங்கி குடிக்கும் போது அப்படியே குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதற்கான காரணம் இவற்றின் சில இளநீருக்குள் பூஞ்சை வளர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் இதை சுத்தமான ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றி தூய்மையானதாகவும் நாற்றம் இன்றியும் இருப்பதை உறுதி செய்த பின்னர் குடிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதை மீறி குடிக்கும் சந்தர்ப்பத்தில் மூக்கு ஒழுகுதல், அலர்ஜி, உடலில் அரிப்புகள், தடிப்புகள், மூச்சு விடுவதில் சிரமம், இருமல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
மருத்துவ ஆலோசனையின் படி இளநீரை அப்படியே வாங்கி குடிப்பது நல்லது அல்ல என கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |