மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ ஆப்பிளை இப்படி சாப்பிடுங்க
பொதுவாகவே ஆப்பிள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பழமாக காணப்படுகின்றது.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே பார்க்க வேண்டிய தேவை இருக்காது என்ற கருத்தும் சமூகத்தில் நிலவுகின்றது.
எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழமான ஆப்பிள் பழத்தில் அதிகளவில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகின்றது.
நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஆப்பிள்கள் பெரிதும் துணைப்புரியும். ஆனால் ஆப்பிளை எவ்வாறு உட்கொள்கின்றோம் என்பதை பொருத்தே அதன் பலன்களும் அமைகின்றன.
எமது தினசரி உணவில் போதுமான நார்ச்சத்து இருக்க வேண்டியது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
ஏனெனில் இது ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. போதுமான அளவு நார்ச்சத்து உடலுக்கு கிடைக்காத பட்சத்தில் செரிமானப் பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் போன்ற நிலைமை உருவாகும்.
மலச்சிக்கலுக்கு ஆப்பிள் தீர்வு கொடுக்குமா?
தற்காலத்தில் பலருக்கு‘மலச்சிக்கல்’ என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்காக, மருத்துவமனையை பலர் நாடுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு மருந்துக்கள் இன்றி வீட்டிலேயே தீர்வு கொடுக்கும் ஆப்பிள் பழத்தை மலச்சிக்கலை போக்க எப்ப சாப்பிட வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் ஆப்பிளை தோலை நீக்காமல் சாப்பிடடுவது சிறந்த தீர்வு கொடுக்கும் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆப்பிளின் தோலில் கரையாத நார்ச்சத்து அதிகளவில் காணப்படுனகின்றது இந்த வகை நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு விரைவில் தீர்வு கொடுக்கும்.
ஆப்பிள் தோலில் காணப்படும் சார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி, மலத்தின் இறுக்கத்தை மென்மையாக்குகின்றது.
அதனால் குடல் சுவர்களை சுருங்கி, செரிமான அமைப்பு வழியாக கழிவுகளை மிகவும் திறமையாக வெளியேற்ற துணைப்புரிகின்றது.
ஆப்பிளின் சதை கரையக்கூடிய நார்ச்சத்து, குறிப்பாக பெக்டின் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. அதன் கரையாத எண்ணைப் போலல்லாமல், கரையக்கூடிய ஃபைபர் தண்ணீரில் கரைந்து, ஜெல் போன்ற பொருளை உருவாக்குவதால் மலம் இலகுவில் வெளியேற உதவி புரிகின்றது.
எனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை தோலுடன் சாப்பிடுவது விரைவில் தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |