ஐபிஎல் ப்ளே ஆப் போட்டிகள் எங்கு நடைபெறும் தெரியுமா? புதிய அணிகள் கோப்பையை வெல்ல செம்ம வாய்ப்பு
ஐபிஎல் 2022க்கான போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடைபெறாத ஐபிஎல் தொடரானது.,
இந்த ஆண்டு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முற்றிலுமாக இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான சரியான அட்டவணைகளும் வரையறுக்கப்பட்டது.
தற்போது மும்பை மற்றும் புனே ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிசிசிஐ பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்தான உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது.
புது வீட்டில் குடியேறப்போகும் சமந்தா! விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
இறுதிப்போட்டி நடக்கும் இடம்
அதன்படி லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று முடியும் வேளையில் அடுத்ததாக மைதானங்கள் மாற்றப்படுகின்றன.
அப்படி பார்த்தால்,எலிமினேட்டர் போட்டியும், குவாலிபயர் 1 போட்டியும் லக்னோவில் உள்ள ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடத்தப்படும் என்றும்

இரண்டாவது எலிமினேட்டர் போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய மைதானமாக மோதிரா மைதானத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ளதால் அந்த இரு நகரங்களை சார்ந்து இந்த பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதனால் புது அணிகளுக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.