ஐபிஎல் 2022: இலங்கை வீரரை உடனே நீக்க வேண்டும்.. சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு;
ஐபிஎல் 2022-க்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், சென்னை அணி மீது ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பக்கம் சுரேஷ் ரெய்னா மற்றும் டூ ப்ளசிஸ் அணியில் எடுக்காதது விவாதமாக எழுந்தாலும், தற்போது இலங்கை சேர்ந்த தீக்ஷனாவை 70 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த விஷயம் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இதனால் சென்னை அணிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ் அமைப்புகள், டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.
மேலும், சென்னை அணியின் இந்த செயலா தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து கூறி உடனே அவரை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மஹீத் தீக்ஷனா சென்னை அணியில் இருந்து நீக்கப்படாவிட்டால், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல், கடந்த காலங்களிலும் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் கிரிக்கெட் விளையாட கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.
Millions of Tamil people all over the world are deeply shocked and hurt by the decision of @ChennaiIPL to buy a Sri Lankan cricketer who has played for Sri Lankan army cricket team as well.
— பிரியக்குமார் அ (@ProudTamizhan1) February 14, 2022
TN CM should take immediate action @mkstalin#Boycott_ChennaiSuperKings pic.twitter.com/ylsJT1CRJH