ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் டூ பிளசிஸ்.. பற்றி ஏபி விராட் கோலி கூறியது என்ன?
ஐபிஎல் இந்த ஆண்டுக்கான போட்டி மார்ச் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. ஆவலுடன் ரசிகர்கள் போட்டியை எதிர்ப்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.
இந்த ஆண்டின் முதல் போட்டியில், சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.
கேப்டனாக பொறுப்பேற்றது மகிழ்ச்சி
இந்த நிலையில், பெங்களூரு அணி நிர்வாகம் தங்களின் புதிய கேப்டன் மற்றும் ஜெர்சியை அறிவித்தது. அதில், புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர் “பப் டு பிளேஸிஸ்” அறிவிக்கப்பட்டார்.

இவருக்கு பல வீரர்கள் வாழ்த்துக்களை கூறினாலும், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி கூறியது., கேப்டனாக டு பிளேஸிஸ் நியமிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி என விராட் வாழ்த்துக்கூற, அவரின் கீழ் விளையாட மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.
அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு பாடுபடுவதற்காக காத்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். அதேப்போல், ஏபி பேசுகையில், டு பிளேஸிஸ்-க்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரை முதலில் ஏலத்தில் தேர்வு செய்து பின்னர் கேப்டனாக பெங்களூரு அணி நிர்வாகம் தேர்வு செய்ததில் எனக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது என கூறினார். தென்ஆப்பிரிக்காவுக்கு டு ப்ளசிஸிஸ் கேப்டனாக செயல்பட்ட போது அவர் தலைமையில் ஏபி டிவிலியர்ஸ் விளையாடியுள்ளார்.
“Happy to pass on the baton to Faf! Excited to partner with him and play under him” - A message from @imVkohli for our new captain @faf1307. ?#PlayBold #RCBUnbox #UnboxTheBold #ForOur12thMan #IPL2022 pic.twitter.com/lHMClDAZox
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022
எனவே அவரின் கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என தெரிந்த டிவில்லியர்ஸ் பெங்களூர் அணிக்காக அவர் கோப்பையை வென்று கொடுக்க தகுதியானவர் என பாராட்டியுள்ளார்.
விராட் கோலியை புழந்த டூ ப்ளசிஸ்
“He’s an amazing leader and the perfect man for the job” - @ABdeVilliers17 sends a heartfelt message to our new captain @faf1307. ?❤️#PlayBold #RCBUnbox #UnboxTheBold #IPL2022 #RCBCaptain pic.twitter.com/UB8XRx54eB
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022
இதுகுறித்து, டு ப்ளசிஸ் கூறுகையில், விராட் கோலி மரியாதைக்கு உரியவர். கிரிக்கெட்டின் போக்கை மாற்றக்கூடியவர்., அதை நான் நேரடியாகவே பார்த்துள்ளேன்.
எனவே பெங்களூரு அணியில் அவரின் உத்வேகம் மிகவும் முக்கியமானது. அவரின் இடத்தை யாரை வைத்து நிரப்புவது என்பது பற்றி என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை என மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
Bold Diaries: Captain Faf Interview@faf1307 talks about the opportunity of captaining RCB, what he’s learnt from MS Dhoni and Graeme Smith, and the amazing fans of RCB, on Bold Diaries with Danish Sait.#PlayBold #WeAreChallengers #IPL2022 pic.twitter.com/2Zdw9sh1dO
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 13, 2022