மீண்டும் அசத்தலான 5வது வெற்றியை பதிவு செய்த பெங்களூர் அணி
ஐபிஎல் தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, ஆரம்பத்திலேயே அனுஜ் ராவத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி டக் அவுட்டானார்.
மேக்ஸ்வெல் 23 ரன்னிலும், பிரபு தேசாய் 10 ரன்னிலும் வெளியேறினர். ஆனாலும், கேப்டன் டூ பிளசிஸ் தனி ஆளாக போராடினார். முதலில் நிதானமாக ஆடிய அவர் பின்னர் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் 6 பேருக்கு கொரோனா - போட்டி நடைபெறுமா?
அவருக்கு ஷாபாஸ் அகமது ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 26 ரன்னில் அவுட்டானார். 4 ரன்னில் சதத்தை தவறவிட்ட டூ பிளசிஸ் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரரான டி காக் 3 ரன்னுடன் வெளியேறினார். கேப்டன் ராகுல் 30 ரன்கள் அடித்தார்.
அவரைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே 6 ரன்னுக்கும், தீபக் கூடா 13 ரன் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். குருனால் பாண்டியா 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார்.
ஆயுஷ் படோனி 13 ரன்னுக்கும், ஸ்டோனிஸ் 24 ரன்னும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தது.
https://twitter.com/i/events/1505336102055387136Another game ?
— Virat Kohli (@imVkohli) April 19, 2022
Another win ?
Onwards & Upwards ?@RCBTweets pic.twitter.com/tlELYOl2VO